அந்த இந்திய 'டத்தோஶ்ரீ'யுடன் லிம் குவான் எங்  புகைப்படம்: ஊடகங்கள் மீது நடவடிக்கை?

அரசியல்
Typography

பெட்டாலிங்ஜெயா, மார்ச்.11- பினாங்கு கடலடி சுரங்கப்பாதை தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி.யினால் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு டத்தோஶ்ரீயுடன்   இருப்பது போன்ற  புகைப்படத்தை வெளியிட்டுள்ள சில ஊடகங்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து  பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆலோசித்து வருகிறார்.

பொது வாழ்க்கையில் இருக்கும் அவரைப் போன்றோர்,  முன்பின் தெரியாதவர்களுடன் கூட  இது போன்று  புகைப்படம் எடுக்கப்படுவது வழக்கமான ஒன்றேயாகும்.  இந்த ஒரு புகைப்படத்தை வைத்து, பினாங்கு முதல்வரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது அருவருக்கத்தக்கது. அபத்தமானது என்று முதல்வரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை கூறியது.

தன்னுடைய ஊழல்கள் அனைத்தையும், பக்காத்தான் ஹராப்பானின் மீது போடுவதற்கு தேசிய முன்னணி மேற்கொண்டிருக்கும் முயற்சி பயனளிக்காது என்று அந்த அறிக்கை கூறியது.

1எம்டிபி ஊழலில் சம்பந்தப்படுள்ளதாக கருதப்படும் மற்றொரு தொழிலதிபர் கூட லிம் குவான் எங்குடன் முன்பு படம் எடுத்துக் கொண்டுள்ளார். எனவே லிம்மை 1எம்டிபி உடன் சம்பந்தப் படுத்த முடியுமா? என்று அந்த அறிகை கேள்வி எழுப்பியது. 

பினாங்கு கடலடி சுரங்கப் பாதை தொடர்பான  எம்.ஏ.சி.சி.யின் ஊழல் விசாரணையை மூடி மறைப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி,  அண்மையில் கட்டுமான நிறுவனத்திடமிருந்து 19 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றது குறித்த விசாரணைக்காக 37 வயதுடைய இந்திய தொழிலதிபரான  டத்தோஶ்ரீ  ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப் பட்டுள்ளார்.

அந்தத் தொழிலதிபருடன்  லிம் இருப்பது போன்ற இந்தப் புகைப்படம் ஒன்று சீன நாளிதழ்கள் உள்பட பல ஊடகங்களில் பிரசுரமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS