14வது பொதுத்தேர்தல்: இம்முறை பாதிக்குப் பாதி புதிய வேட்பாளர்கள்- கெராக்கான் தகவல்!

அரசியல்
Typography

சிரம்பான், மார்ச் 13- எதிர்வரும் பொதுத்தேர்தலில் கெராக்கான் சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் பாதிக்குப் பாதி புதுமுகங்களாக இருப்பார்கள் என கெராக்கானின் தலைவர் டத்தோஶ்ரீ மா சியூ கியோங் தெரிவித்தார்.

"இம்முறை பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் புதுமுகங்களாக தான் இருப்பார்கள். எங்களின் வேட்பாளர் பட்டியலைத் தேசிய முன்னணி தலைமைத்துவத்திடம் சமர்ப்பித்து விட்டோம். இறுதி முடிவு மிக விரைவில் எடுக்கப்படும்" என அவர் கூறினார்.

மேலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே வேட்பாளரை நிறுத்த போவதுமில்லை எனவும் மா சியூ கியோங் கூறினார். "நாங்கள் 45 இடங்களில் மட்டும் போட்டியிடுவதால் ஒரே வேட்பாளரை நாங்கள் நிறுத்த போவதில்லை" என சிரம்பானில் உள்ள கெராக்கான் அலுவலகத்திற்கு வருகை தந்தபோது அவர் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS