ஊத்தாங் மெலிந்தான் மஇகாவுக்கு இல்லை? சட்டமன்றத் தொகுதிகள்: யார் யார்? எங்கே?

அரசியல்
Typography

கோலாலம்பூர், மார்ச்.13-  நீண்ட காலமாக மஇகா போட்டியிட்டு வந்த சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான  பேரா, ஊத்தாங் மெலிந்தான் தொகுதி, வரும் பொதுத்தேர்தலில் அம்னோவுக்கு கைமாறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அதற்குப் பதிலாக மீண்டும் சுங்கைத் தொகுதி  மஇகாவுக்கு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் ஊத்தாங் மெலிந்தான் தொகுதியில் மஇகா வேட்பாளர் தோல்வி கண்டுள்ள நிலையில், அந்தத் தொகுதிக்கு அம்னோ குறிவைத்தது. 

கணிசமான இந்திய வாக்களர்களைக் கொண்ட இந்தத் தொகுதி, பகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதிக்குள் உட்பட்டிருக்கும் நிலையில், பகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும்  துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி, ஊத்தாங் மெலிந்தானில் அம்னோ போட்டியிட வேண்டும் என்று  ஆர்வம் காட்டியதாக தெரியவந்துள்ளது.

அதற்கு பதிலாக மீண்டும் மஇகாவுக்கு   வழங்கப்படும் சுங்கைத் தொகுதியில் பேரா மாநில மஇகா தலைவர் டத்தோ இளங்கோ போட்டியி டுவார் என்றும் அதேவேளையில் பேராவிலுள்ள இதர இரண்டு சட்டமன்றத் தொகுதிகளான புந்தோங்கில் மகளிர் தலைவியான தங்கராணியும் ஜெலாப்பாங்கில் தங்கராஜுவும் போட்டியிடக்கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. 

புந்தோங்  சட்டமன்ற தொகுதிக்காக  மைபிபிபி நீண்ட காலமாக   வைத்திருந்தத குறி தப்பிவிட்டது. 

சிலாங்கூரிலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் பத்து கேவ்ஸ் தொகுதியில் மீண்டும் காஜாங் ரவி போட்டியிடும் நிலையில், ஈஜோக் தொகுதியில் கே.ஆர். பார்த்தீபன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. ஶ்ரீ அண்டலாஸ் தொகுதியில் ஆர்.எஸ் மணியம் களமிறங்கக்கூடும்.

பகாங்கிலுள்ள  சபாய் தொகுதியில் பகாங் மஇகா தலைவர் டத்தோ குணசேகரன் நிறுத்தப்படுவார் என உறுதிப்படத் தெரிகிறது.

நெகிரி செம்பிலானைப் பொறுத்தமட்டில் ஜெராம் பாடாங் தொகுதியில் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.மாணிக்கம் மீண்டும் போட்டியிட வுள்ளார். 

போர்ட்டிக்சன் தொகுதியில் மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் தினாளன் ராஜகோபாலுவின் பெயர், வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது.

மலாக்கா காடிங் தொகுதியில் புதுமுகமான டத்தோ பன்னீர் செல்வம் என்பவர் போட்டியிடவார் எனத் தகவல் கசிந்துள்ளது அதேவேளை யில், ஜொகூர், கம்பீர் தொகுதியில் மூன்றாவது முறையாக டத்தோ அசோஜனும் கஹாங்கில் ஆர். வித்தியானந்தனும் போட்டியிடக்கூடும்.

தெங்காராவில் ரவின் கிருஷ்ணசாமியையும் புத்ரி வங்சா தொகுதியில் புதுமுகமான எஸ்.கண்ணனையும்  மஇகா நிறுத்தும் என்று தெரிகிறது.

கெடாவில் மஇகா போட்டியிடும் இரு சட்டமனறத் தொகுதிகளில் புக்கிட் செலாம்பாவில் டத்தோ ஜஸ்பால் சிங் மற்றும் லுனாசில் லங்காவி மஇகா தொகுதித் தலைவர் நாகையா ஆகியோர் தேர்தல் களத்தில் இறங்கத் தயாராகி விட்டனர். 

பினாங்கில் மஇகா இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஜி. தினகரன் மற்றும் பிறைத் தொகுதியில் மஇகா டிவிசன் தலைவர் சுரேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS