இந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி  தந்தார் லிம் குவான்! 

அரசியல்
Typography

பினாங்கு, மார்ச். 14-  அண்மையில் எம்.ஏ.சி.சி.யினால் கைது செய்யப்பட்ட  ஓர் இந்திய தொழிலதிபரான  'டத்தோஶ்ரீ'  பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் எடுத்துக் கொண்டது போன்ற ஒரு புகைப் படம் வெளியாக்கப் பட்டதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்.

 மசீசவுக்கு சொந்தமான நாளிதழான 'தி ஸ்டார்' நாளிதழின் முதன்மை ஆசிரியர் வோங் சுன் வாய், அந்த 'டத்தோஶ்ரீ'யுடன்  கைகுலுக்கிக் கொண்டு நிற்பது போன்ற புகைப்படத்தை முதல்வர் லிம் குவான் எங் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பினாங்கு கடலடி சுரங்கப்பாதை தொடர்பாக எம்.ஏ.சி.சி மேற்கொண்டு வரும் ஊழல் விசாரணையை 'மூடிமறைக்க' கட்டுமான நிறுவனங்க ளிடமிருந்து 19 மில்லியன் ரிங்கிட் பணம் பெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில் ' டத்தோஶ்ரீ'  கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்  இங்கு கொம்தாரில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், ஸ்டார் மீடியா குழுமத் தலைமைச் செயல்நிலை அதிகாரியான வோங் சுன் வாய்,  சம்பந்தப்பட்ட அந்த டத்தோஶ்ரீயுடன் கைகுலுக்கிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை லிம் குவான் எங் நிருபர்களுக்குக் காட்டினார்.

சர்ச்சைக்குரிய அந்த டத்தோஶ்ரீ   தேசிய முன்னணியின் வலுவான ஆதரவாளர்.  மாறாக, சிலர் குறைகூறுவது போன்று எனக்கு வேண்டியவர் அல்ல என்று நிருபர்களிடம் லிம் குறிப்பிட்டார்.  இவர் தேசிய முன்னணிக்கு மிகவும் வேண்டியவர் என்பதைக் காட்ட இது போன்ற பல படங்கள் இருக்கின்றன என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் அந்த தொழிலதிபரை எனக்குத் தெரியாது என்று 'ஸ்டார்' முதன்மை ஆசிரியர் வோங் சுன் வாய் தெரிவித்தார்.

"தம்முடைய பத்திரிகைப் பணியில் பல தரப்பட்ட மக்களையும் தாம் சந்திப்பதாக கூறிய அவர், தமக்குத் தெரியாத பலர்  புகைப்படம் எடுத்துக் கொள்ளும்படி தம்மை கேட்பது உண்டு என்றும் சுட்டிக்காட்டினார். 

பினாங்கு முதல்வர் காட்டிய அந்தப் படம்  கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் எடுத்தது என்று விளக்கினார்.

"அந்தப் படத்தில் என்னுடன் மேலும் இருவர் இருக்கிறார்கள். இரவு விருந்து உடையை நான் அணிந்துள்ளேன். காலில் காலணி அணிந்துள்ளேன். ஆனால் லிம், அந்த தொழிலதிபருடன் இருக்கும் படம் லிம்மின் தனிப்பட்ட வீட்டில், காலில் காலணி கூட இல்லாமல் சம்பந்தப்பட்ட இருவர் மட்டும்மே இருக்கும் படம்" என்று வோங் சுன் வாய் சுட்டிக்காட்டினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS