பொதுத்தேர்தல்: 'மீரா' போட்டியிடாது! தலைவர் இராஜரத்தினம் கூறுகிறார்

அரசியல்
Typography

பூச்சோங், மார்ச்.14- பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் புதிய வியூகப் பங்காளியாக விளங்கும் 'மீரா'  எனப்படும் சிறுபான்மை உரிமை செயல் கட்சி, அடுத்து வரும்  பொதுத்தேர்தலில் போட்டியிடாது.  கூட்டணி தலைமைத்துவம் அழைத்தால் மட்டுமே அது போட்டியிட முன்வரும் என்று அதன் தேசியத் தலைவர் ஏ. இராஜரத்தினம் தெரிவித்தார்.

'நாங்கள் புதிய பங்காளிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்ட எந்த முடிவுகள் எதிலும் குறுக்கிடக்கூடாது. பக்காத்தானின் முடிவுக்கு மதிப்பளிப்போம்' என்று இங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் சொன்னார்.

'இதன் காரணமாக நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை முடிவு செய்திருக்கிறோம். இருப்பினும், பக்காத்தான் வாய்ப்பளிக்க முன்வந்தால் நாங்கள் போட்டியிடுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை' என்றார் அவர்.

தங்களுக்கு எத்தகைய வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது பற்றிக் கருதாமல்  தாங்கள் ஜசெக மற்றும் பிகேஆரிலுள்ள இந்திய வேட்பாளர்களுக்கு தேர்தல் களத்தில் உதவும் பணியைச் செய்ய முடிவு செய்துள்ளதாக இராஜரத்தினம் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS