நாடு திவாலாகுமா? பொய்யான கூற்று- என்கிறது கருவூலம்!

அரசியல்
Typography

கூச்சிங், ஏப்ரல்.15-  விரைவில்  மலேசியா  ஒரு  திவால் நாடாக ஆகிவிடும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது  என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களைக் கருவூல துறைத் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ முகம்மட் இர்வான் செரிகார் அப்துல்லா தெரிவித்தார்.

'இந்தக் கூற்று சரியானதல்ல. பொறுப்பற்ற, நேர்மையற்ற சிலர் இணையத்தில் பொய்யாக பரப்பிய செய்தி இது.  நாட்டின் நிதி நிர்வாகத்தைக் கையாளும் பொறுப்பில் இருக்கிறேன் என்ற முறையில் நான் ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். மலேசியாவின் பொருளாதாரம் வலுவாக நிலையில் இருக்கிறது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்' என்றறார் அவர். 

கடந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.9 விழுக்காடாக இருந்தது. இவ்வாண்டு அது 6 விழுக்காட்டை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 'பிரிம்' தொகையை பல்வேறு பிரிவுகளில் அதிகரிக்க பிரதமர் நஜிப் எடுத்த முடிவே, நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதைக் காட்டுவதாக உள்ளது என்று டான்ஶ்ரீ முகம்மட் இர்வான் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS