முன்னோடிகளின் போராட்டத்தை  உணராத  இளைய தலைமுறை! -டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்

அரசியல்
Typography

ஈப்போ, ஏப்ரல்.15- எதிர்காலத் தலைமுறையினரின் நலன்களை பாதுகாப்பதற்காக தங்களின் சமுதாய முன்னோடிகள் நடத்திய போராட்டத்தை இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ளவில்லை என்று மஇகாவின் உதவித்தலைவர்களில் ஒருவரான டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இருந்த பிரதமர்கள், இந்தியர்களை ஓரங்கட்டிவிட்டனர். இதனால் சமுதாயத்தை மேம்படுத்துவதில் தலைவர்கள் கடுமை யான போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. நாட்டின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தில் இருந்து இந்தியர்கள் அலட்சியப் படுத்தப்பட்டு விட்டனர் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

மற்ற பிரதமர்களைப் போல அல்லாமல், பிரதமர் நஜிப் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு முனைப்புகளை முன்னெடுத்துள்ளார்.  பொருளாதார ரீதியில் கைதூக்கி விடுவதற்காக பின்தங்கியவர்களுக்கு, பல்வேறு நிதியுதவிகளை  அளித்து வருகிறார் என்று அவர் சொன்னார். 

அரசாங்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான போலிச் செய்திகளினால் இளைய சமுதாயத்தினர் ஈர்க்கப்பட்டு விடக்கூடாது. பொறுப்பற்ற சில தரப்பினர் இது போன்ற போலிச் செய்திகந்த் தொடர்ந்து பரப்பி வருகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS