கம்பீர் சட்டமன்றத் தொகுதியில் டான்ஶ்ரீ மொகிதீன் போட்டி?

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்,15- ஜொகூரில் கம்பீர் சட்டமன்றத் தொகுதியில் இம்முறை பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவரான டான்ஶ்ரீ மொகிதீன் யாசின் போட்டியிடவிருக்கிறார்.

ஜொகூர் சட்டமன்றம் கடந்த வாரம் கலைக்கப்படும் வரையில் கம்பீர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் டத்தோ அசோஜன் ஆவர். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளருடன் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் துணைப் பிரதமரான மொகிதீன், இது குறித்து இங்கு நடந்த சந்திப்புக் கூட்டம் ஒன்றில் பேசிய போது கம்பீர் தொகுதி மக்கள் 'சரி' என்று சொன்னால்,  நீங்கள் இந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்று என் நண்பர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பலத்த ஆரவாரத்திற்கு இடையே தெரிவித்தார்.

இதன் வழி தாம் சட்டமன்றத்திற்கும் போட்டியிட மொகிதீன் ஆர்வம் கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டுமுதல் 1995 ஆம் ஆண்டு வரையில் ஜொகூர் மந்திரி புசாராகவும்  இவர் இருந்துள்ளார்.

தமது பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் இவர் மீண்டும்  போட்டியிடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது அது குறித்து கருத்துரைக்க அவர் மறுத்து விட்டார்.

கம்பீர் சட்டமனற தொகுதியில் மஇகாவின் சார்பில் தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிட்டு கடந்த 2004ஆம் ஆண்டு,  2008 ஆம் ஆண்டு ம் 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது டத்தோ அசோஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS