'ஓட்டு போட்டுட்டீங்களா? 'மை' விரலோடு வாங்க, பான் மீ - 'பாக்குத் தே'  இலவசம்!" 

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.15- 'ஓட்டு போட்டீங்களா? விரலைக் காட்டுங்க.. விரலில் ஓட்டு போட்டதுக்கு அடையாளமா 'மை' இருந்த எங்க  கடையிலே  உணவு இலவசம்' என இரண்டு பிரபலமான சீன உணவகங்கள் அறிவித்திருக்கின்றன.

மே மாதம் 9 ஆம் தேதி வாக்களிப்பு நாள்.  அன்றைய தினம் யார், யாருக்கெல்லாம் வாக்களித்தாலும், மாறுபட்ட கருத்தைக் கொண்டவர்களாக வாக்காளர்கள் இருந்தாலும் ஒரு விஷயத்தில் மலேசியர்கள் எல்லாம் ஒன்று. அதாவது உணவைத் தேடிச் சென்று ருசித்து சாப்பிடுவதில் மலேசியர்கள் அனைவருமே ஒரே மாதிரித் தான் என்பது நாடறிந்த விஷயம்.

மே 9 ஆம் தேதியன்று வாக்களிக்கச் சென்று விட்டு விரலில் வாக்களித்த அடையாள மையோடும் வருவோருக்கு தங்களுடைய உணவகத்தில் 'பாக்குத் தே' இலவசம் என்று கிள்ளானிலுள்ல பிரபல சீன உணவகமான 'எங் சுன் பாக்குத் தே' உணவகம் அறிவித்துள்ளது.

இந்த உணவகத்தின் உரிமையாளர் ஹுவாங் யோங் ஜின் என்பவர் தம்முடைய முகநூல் பக்கத்தில் இந்த அறிவிப்பைச் செய்து அசத்தியுள்ளார்.

இதனிடையே, மற்றொரு சீன உணவகக் குழுமமான மீட் மீ ( Meet Mee)என்ற பிரபல மீ  உணவக நிறுவனமும் வாக்களித்த விரல் மை அடையாளத்துடன் தங்கள் உணவகத்திற்கு வருபவர்களுக்கு இலவச 'பான் மீ' உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்திற்கு தேசா ஸ்தாப்பாக், டானாவ் கோத்தா மற்றும் சுங்கை லோங் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்தப் பொதுத்தேர்தலில் எங்களின் 'பான் மீ'யிக்காக மக்கள் யாரும் வாக்களிக்கப் போவதில்லை. அவர்கள் அவர்களின் கடமையைச் செய்யப் போகிறார்கள். எனவே, இந்தட் தேர்தலில் எங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்பதற்க்கா நாங்கள் இவ்வாறு செய்கிறோம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS