உங்களின் வாக்கு நிலையங்கள்: இணையம் வழி அறியலாம்!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.16-  பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள், தங்களின் வாக்குப்பகுதி நிலையங்கள் குறித்த தகவல்களை இன்று இணையம் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம். 

தேர்தல் ஆணையத்தின் www.spr.gov.my என்ற அகப்பத்தின் வாயிலாக வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்யும் இடங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். MySPR Semak (மைஎஸ்பிஆர் செமாக்) என்ற கைத்தொலைபேசி ஆப்பின் வாயிலாகவும், இது குறித்த தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

பொதுமக்கள் 03-8892 7018 என்ற எண்ணின் வாயிலாகவும், 15888 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தங்களின் வாக்குப்பதிவு இடங்கள் குறித்து அறிந்துக் கொள்ளலாம்.  

நாட்டின் 14-ஆவது பொதுத் தேர்தல் மே மாதம் 9-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. வேட்பாளர்கள் நியமனம் இம்மாதம் 28-ஆம் தேதியன்று நடைபெறும்.

வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்யும் வகையில், மே 9-ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS