சிங்கையில் இருந்து வரும் வாக்காளர்களுக்கு இலவச பேருந்து! -ஜசெக ஏற்பாடு

அரசியல்
Typography

ஜொகூர்பாரு, ஏப்ரல்.17- பொதுத் தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து ஜொகூருக்கு வருகை புரியவிருக்கும் ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு உதவும் பொருட்டு எதிர்க்கட்சிகள் இலவச பேருந்து வசதிகலை வழங்கவுள்லனன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 பேருந்துகள் மே மாதம் 9ஆம் தேதியன்று வாக்காளர்களுக்கான இந்ட்தச் சேவயை வழங்கவுள்ளன. சிங்கப்பூரில் இருந்து அன்றைய தினம் ஜொகூருக்கு வருகை புரிவதற்காகன பேருந்து டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் இந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக ஜசெகவின் பிரசார பிரிவு இயக்குனர் ஜியார்ஜ் போ தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் நிதியுதவிடன் இந்தப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்து பகாட், சிகாமட், குளுவாங் மற்றும் மூவார் ஆகிய இடங்களுக்கு இந்தப் பேருந்துகள் சேவை மேற்கொள்ளும் என்று அவர்சொன்னார்.

 இந்தச் சேவைகள் ஒருவழி சேவைகளாகும். ஏனெனில், வாக்காளர்கள் எப்போது மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்புவார்கள் என்று தெரியாது எனபதால் தங்களால் ஒருவழிச் சேவையே வழங்க முடிந்திருப்பதாக அவர் கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS