கம்பத்துக்கு போய் ‘உஸ்தாஸ்’ வேலையை  பாருங்கள்! –ஹாடிக்கு மகாதீர் பதிலடி! 

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17- துன் மகாதீர் முகமட் மீண்டும் அரசியலுக்கு வருவதை விட அவர் மீண்டும் மருத்துவராக ஒரே மலேசியா கிளினிக்கில் சேவை செய்வதே உத்தமம் என்று பாஸ் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியதற்கு பதிலடி கொடுத்தார் துன் மகாதீர்.

தனது கம்பத்துக்குப் போய் ஹாடி அவாங் சமய போதகராக செயல்படுவது அனைவருக்கும் நன்மை  தரும் என்று மகாதீர் கூறியுள்ளார்.  

“அரசியலில் நுழையாதீர்கள்.  நீங்கள் ‘உஸ்தாஸ்’ஆக  இருப்பதே நல்லது. நீங்கள் கம்பத்தில் தான் இருக்க வேண்டும். அதுவே உத்தமம். உங்களுக்கு அரசியல் புரியவில்லை” என்று மகாதீர் ஹாடிக்கு பதிலளித்தார்.

“நீங்கள் திரெங்கானு மாநிலத்தில் மந்திரி புசாராக இருந்து ஆட்சிப் புரிந்ததில் இருந்தே  உங்களின் ‘வல்லமை’ என்னவென்று அனைவருக்கும் புரிந்து விட்டது. பள்ளிக்கு திரும்பிச் சென்று, சமயத்தைப் போதியுங்கள். அதுவும் நல்லவிதமாக போதியுங்கள்.  மற்றவரை மத நம்பிக்கைக்கு எதிரானவர் என்று பொய்யுரைக்கும் பொதனை வேண்டாம்” என்று மகாதீர் நினைவுறுத்தினார். 

லங்காவி வேட்பாளராக மகாதீர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்த வயதில் மீண்டும் அரசியல் பிரவேசம் தேவைத்தானா? என்றும், அவர் மீண்டும் மருத்துவராக, ஒரே மலேசியா கிளினிக்கில் வேலை செய்வது அவருக்கு நல்லது என்றும் ஹாடி அவாங்  கேலியாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS