துணைப்பிரதமர் ஸாஹிட்டை எதிர்த்து மந்திரவாதி  'ராஜா போமோ' போட்டி!

அரசியல்
Typography

ஈப்போ, ஏப்ரல்.17- 'ராஜா போமோ' என்று தன்னைச் சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட இப்ராஹிம் மாட் ஜின் என்ற 68 வயதுடைய மந்திரவாதி, எதிர்வரும் பொதுத்தேர்லில் பாகான் டத்தோ தொகுதியில் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியை எதிர்த்துப் போட்டி போடப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு காணாமல் போன எம்.எச்.370  மலேசிய விமானத்தை, பறக்கும் கம்பளம் மற்றும் மூங்கில் தொலை நோக்கி கொண்டு தம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று கூறி, கோலாலம்பூர் விமான நிலையத்தில் மாந்திரீகத்தில் ஈடுபட்டு செய்தியின் வழி ஊடகங்களில்   பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செனி சீலாட் காயுங் காய்ப் மலேசியா என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்து வரும் ராஜா போமோ, இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஶ்ரீ ஸாஹிட்டை எதிர்த்துப் போட்டியிடப் போகும் தகவலை தெரிவித்தார். 

'இது ஏமாற்று வேலை என்று நினைக்க வேண்டாம்.  அவதிப்படுகின்ற மக்களுக்கு உதவவே நாங்கள் முயற்சிக்கின்றோம். நான் மட்டுமல்ல, என்னுடைய சங்கத்தைச் சேர்ந்த 27 பேர், நாடு தழுவிய அளவில் பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுவார்கள் என்று அவர் கூறினார்.

சங்கத்தின் துணைத் தலைவரான லெமான் கனவுல்லா, பங்கோர் சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார் என்று அவர் தெரிவித்தார். பங்கோர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பேரா மந்திரி புசார் டத்தோஶ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதீர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS