ராஜபக்சே மலேசியா வருகை; மஇகா இளைஞர்கள் போலீசில் புகார்

அரசியல்
Typography

கோலாலம்பூர், செப். 1- போர்க் குற்றவாளி மகிந்தா ராஜபக்சே மலேசியாவில் நடக்கும் மாநாட்டுக்கு வருகையளிப்பதை எதிர்த்து மஇகா இளைஞர் பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளது.

இன்று முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை தலைநகர், புத்ரா உலக வாணிப மையத்தில் நடக்கவிருக்கும் ஆசியான் அரசியல் கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகிந்தா ராஜபக்சே மலேசியாவிற்கு வருகிறார். 

இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களின் கொலைக்கு காரணமா தமிழின கொலையாளி மகிந்தா ராஜபக்சே மலேசியாவிற்குள் வரக்கூடாது, சம்பந்த மாநாட்டை உடனடியாக நிறுத்தவேண்டும் என கோரி இளைஞர் பிரிவு போலீசில் புகார் செய்துள்ளது.

அப்புகாரில், தமிழர்களைக் கொன்ற மகிந்தாவின் மலேசிய வருகை, மலேசிய தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாய் அமைந்துள்ளது. எனவே மகிந்தாவின் வருகையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் பிரிவு மட்டுமின்றி பல அரசு சாரா இயக்கங்களும் பொதுமக்களும் மகிந்தா வருகையை எதிர்த்து போலீசில் புகார் அளித்துள்ளன. இதனை அடுத்து, இன்று காலை புத்ரா உலக வாணிப மையத்திற்கு முன்புறம் ஆர்ப்பார்ட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS