பிரதமருக்கு எதிராக இஷாம் வழக்கு!

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.14- 1எம்டிபி நிறுவனம் தொடர்பில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், மலேசிய அரசாங்கம் மற்றும் இதர 13 பேர் மீது முன்னாள் செனட்டரான டத்தோ முகமட் இஷாம் வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த வழக்கைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகமட் இஷாம், குடிமகன் என்ற முறையிலும் வரிச் செலுத்துகிற இதர மலேசியர்களின் சார்பிலும் இந்த சிவில் வழக்கைத் தாம் தொடுத்திருப்பதாக சொன்னார்.

மலேசியாவின் முதலீட்டு அமைப்பான 1எம்டிபியில் ஏற்பட்ட இழப்புக்கு யார் காரணம்? அத்தகைய இழப்புக்கு யார் பொறுப்பாவது? மற்றும் முறையான சட்ட வழிகளில் அந்தப் பணத்தை எப்படி மீட்பது? என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது.

முன்பு அம்னோ, பிகேஆர் மற்றும் பிரிபூமி பெர்சத்து ஆகியவற்றில் அங்கம் வகித்துள்ள முகமட் இஷாம், இப்போது 'பார்ட்டி பெபாஸ் ரசுவா' என்ற கட்சியின் தேசியத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இந்தக் கட்சி முன்பு 'நியூ ஜெனரேசன் பார்ட்டி' என்றழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS