கேமரன்மலையில் மஇகா வேட்பாளரே நிறுத்தப்படுவார்! -சுப்ரா திட்டவட்டம்

அரசியல்
Typography

 கேமரன்மலை, ஏப்ரல்.15- கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா மீண்டும் தனது வேட்பாளரை நிறுத்தும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கேமரன்மலைக்கு இரண்டுநாள் வருகை மேற்கொண்டிருக்கும் டத்தோஶ்ரீ சுப்ரமணியம், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுடனான சந்திப்புக் கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மஇகா கிளைத் தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

கேமரன்மலை தொகுதியில் மீண்டும் மஇகா தான் போட்டியிட இருக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனாலும், அடுத்த பொதுத்தேர்தலின் போது இங்கு மஇகாதான் போட்டியிடும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் சொன்னார்.

தொகுதிகள் விஷயத்தில் தேசிய முன்னணிக்கு என ஒரு கொள்கையுண்டு. அந்தக் கொள்கையின்படி அங்கு நாங்கள் எங்கள் வேட்பாளரை அங்கு நிறுத்துவோம்.  சரியான தருணத்தில், பொருத்தமான வேட்பாளரை மஇகா அறிவிக்கும் என்று சுகாதார அமைச்சருமான டத்தோஶ்ரீ சுப்ரமணியம் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS