‘நியூ ஜெனரேஸன் கட்சிக்கு நான்தான் இன்னமும் தலைவர்! -குமார் அம்மான்

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17- ‘நியூ ஜெனரேஸன் பார்ட்டி’ எனும் அரசியல் கட்சியை, திடீரென்று ‘பார்ட்டி பேபாஸ் ராசுவா’ என்று பெயர் மாற்றம் செய்து ‘பாக்காத்தான் ஹராப்பான்’ எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததால் தற்போது அக்கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெயர் மாற்றம் கண்ட அக்கட்சியின் தலைவராக டத்தோ முகமட் இஸாம் நியமிக்கப்பட்டு, கோபி கிருஷ்ணன் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். கோபி கிருஷ்ணனின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நியூ ஜெனரேஸன் கட்சித் தலைவர் குமார் அம்மானும் பொதுச் செயலாளர் முகமட் சாய்னியும் இது தொடர்பாக செய்தியாளர் கூட்டத்தில் விளக்கம் அளித்தனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நியூ ஜெனரேஸன் பார்ட்டி இன்றுவரை அதே பெயரில்தான் இயங்கி வருகிறது. அன்று முதல் இன்று வரை தேசிய முன்னனிக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப்பிற்குமே தங்களது ஆதரவு இருந்து வருகிறது என்று குமார் அம்மான் கூறினார்.

கோபி கிருஷ்ணன் மீதும் அவரின் நண்பர்கள் மீதும் போலீசிலும் ஆர்.ஓ.எஸ் எனப்படும் சங்கங்கள் பதிவகத்திலும் புகார் அளித்துள்ளதாக குமார் அம்மான் தெரிவித்தார்.. நியூ ஜெனரேஸன் பார்ட்டி என்பதே இக்கட்சியின் அதிகாரப்பூர்வ பெயர் என்றும் தாமே இன்னும் தலைவராக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

எந்தவொரு பொதுக் குழு கூட்டமும் இல்லாமல் இந்த முடிவை அவர்கள் எடுத்தது சட்டப்பூர்வமாக செல்லாது. அதனால், சங்கங்களின் பதிவகம் இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்க்கவேண்டும் என்று முகமட் சாய்னி கோரிக்கை விடுத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன், கோபி கிருஷ்ணனும் டத்தோ முகமட் இஸாமும் தங்களுடைய கட்சியின் பெயர் மாற்றத்தையும் புதிய செயற்குழு உறுப்பினர்களின் பெயரையும் அறிவித்தனர். அதோடு 'பக்காத்தான் ஹரப்பானுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதனால் நியூ ஜெனரேஸன் கட்சி உயர்மட்ட உறுப்பினர்களிடையே குழப்பதையும்  ஏற்படுத்தி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS