பாஸ் தனித்துப் போட்டியிட்டால் சரிவு யாருக்கு? மகாதீர் விளக்கம்

அரசியல்
Typography

 கோலாலம்பூர், ஏப்ரல்.18- அடுத்த பொதுத்தேர்தலில் தனித்தே போட்டியிடுவது என பாஸ் கட்சி எடுத்திருக்கும் முடிவு அக்கட்சி தன்னைத் தானே கீழறுத்துக் கொள்ளும் விதமாக இருப்பதோடு எதிர்க்கட்சிகளையும் கீழே பிடித்துத் தள்ளுவதாக அமைந்துவிடும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

இதன் விளைவாக, தேர்தலில் மும்முனைப் போட்டி உருவெடுக்கும். இறுதியில் தேசிய முன்னணி வெற்றி பெற்றுவிடும் என்று அவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலத் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, பாஸ் கட்சி கூறியிருப்பதைப் போல அக்கட்சி 80 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுமேயானால் 15 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க முடியாது என்றார் அவர்.

அது போட்டியிட முனையும் 80 தொகுதிகளில் பெரும்பாலானவை தோற்கக்கூடிய தொகுதிகள் என்பது அக்கட்சிக்கே தெரியும். ஆனால் கட்சியின் வழக்கப்படி அதற்கு வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் கூட அது போட்டியிடும். பாஸ் தனித்தே போட்டியிடுமானால், அது அடையப் போகும் வெற்றி மிகக் குறைவானதாகவே இருக்கும் என்று துன் மகாதீர் சொன்னார்.

1999ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அதற்கு பிந்திய பொதுத் தேர்தல்களிலும் பிகேஆர், ஜசெக ஆகிய கட்சிகளின் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட போதெல்லாம் பாஸ் கட்சி கணிசமான தொகுதிகளை வென்றுள்ளது. இடையில் 2004 ஆம் ஆண்டில் அது தனித்துப் போட்டியிட்ட போது 5 தொகுதிகளில் மட்டுமே அது வெற்றிபெற முடிந்ததை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS