பெர்சத்து கட்சியிலிருந்து மூத்த தலைவர் கமாருல்ஸமான் விலகினார்

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 19- டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தலைமையில் இயங்கி வரும் பெர்சத்து கட்சியின் மூத்த தலைவர் கமாருல்ஸமான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

பதவிக்காகவும் அரசியல் அதிகாரத்திற்காகவுமே அக்கட்சி போராடி வருவதால் அக்கட்சி தலைவர்கள் மேல் இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன், ரெம்பாவ் தொகுதியிலிருந்து 500 பேர் பெர்சத்து கட்சியிலிருந்து ஒரே நேரத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது. அவர்களும் கட்சியின் தலைவர்கள் மீது இருந்த நம்பிக்கை இழந்துவிட்டதால் விலகுவதாக காரணம் கூறினர்.

இதனிடையே, பெர்சத்துக் கட்சியை விட்டு விலகும் அந்த உறுப்பினர்கள் தங்கள் சொந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சியைப் பயன்படுத்த நினைத்தவர்கள். ஆனால், மக்களின் நன்மைக்காக போராடும் இக்கட்சியிலிருந்து அவர்கள் விலகுவதால் தங்களுக்கும் கட்சிக்கும் எந்தவொரு பாதகமும் இல்லை என்று பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் கருத்துரைத்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS