தேசிய முன்னணி ஒருபோதும் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற முடியாது: லிம் குவான் எங்

அரசியல்
Typography

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 20- அடுத்தப் பொதுத் தேர்தல் மட்டுமல்ல, எப்போதுமே பினாங்கு மாநிலத்தைத் தேசிய முன்னணியால் கைப்பற்ற முடியாது என்று லிம் குவான் எங் சூளுரைத்தார்.

“பினாங்கு மக்களுக்கு தேசிய முன்னணியின் ஆட்சிக்கும் பக்காத்தான் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியும். அவர்களுக்கு நன்மைப் பயக்கும் ஆட்சி எதுவென்று அவர்களே முடிவு செய்துதான் இதற்கு முன்னர் நடந்த பொதுத் தேர்தல்களில் எங்களுக்கு அவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்” என்றார் லிம்.

பினாங்கில் முன்பு பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் இருந்த இடங்கள் இப்போது சுத்தம் செய்யப்பட்டு அழகாக உருவெடுத்து இருக்கிறது. நீர் பற்றாக்குறைச் சரிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பினாங்கு பழையபடி மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று லிம் எச்சரித்தார்.

பினாங்கு மாநிலத்தை கூட்டரசு பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற டத்தோஶ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சூரின் கருத்தையும் அவர் சாடினார். 

தேசிய முன்னணி எதிர்வரும் 14ஆம் பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றும் என்று ஒரு நாளிதழில் வெளியான செய்தியைப் பற்றிக் கருத்துரைத்த போது அவர் இதனைக் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS