சிலாங்கூர் ஆட்சி வலுவாக உள்ளது; பாஸ் உறுப்பினர்களின் நிலை இனி முடிவெடுக்கப்படும்-  அஸ்மின் அலி

அரசியல்
Typography

கோலாலம்பூர், மே.20- சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இருக்கும் பாஸ் கட்சி உறுப்பினர்களின் நிலையைப் பற்றி பிகேஆர் கட்சியின் அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அறிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மனியிலிருந்து அலுவல் பயணத்தை முடித்து நேற்று மலேசியா திரும்பிய அவர், இதுபற்றி முதலில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் தொலைப்பேசியில் கலந்துரையாடினார். ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் வரை பாஸ் கட்சியுடன் தொடர்ந்து கலந்தாலொசிக்கும்படி அன்வார் கூறியதாக அஸ்மின் தெரிவித்தார்.

பாஸ் கட்சி பிகேஆருடனான அரசியல் உறவை முறித்து கொண்டதிலிருந்து இந்த குழப்பம் தொடர்கிறது. இதனைப் பற்றி பேசி முடிவெடுக்க அஸ்மினை நேரில் சந்திக்க வேண்டும் என்று பாஸின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“சில பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ் கட்சியுடன் இணைந்து சிலாங்கூர் சட்டமன்றத்தில் பிகேஆரின் பெரும்பான்மையை இழக்க செய்து ஆட்சியை கலைக்க திட்டம் கொண்டுள்ளனர் எனும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எங்களின் ஆட்சி மிகவும் வலுவாக உள்ளது. சிலாங்கூரில் அரசியல் நெருக்கடிகள் எதுவும் ஏற்படவில்லை” என்று அஸ்மின் அலி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS