'நான் பிரதமர் வேட்பாளர் அல்ல!' உரசல்கள் விளைவு: ஒதுங்கினார் அன்வார்

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஜூன்.18- எதிர்க்கட்சிக் கூட்டணியான 'பக்காத்தான் ஹரப்பான்' சார்பில் தாம் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற நிலையை தாம் ஏற்கப் போவதில்லை என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்றால், தாம் பிரதமர் பதவியை ஏற்பதில்லை எனத் தாம் முடிவு செய்திருப்பதாக கூறிய அவர், தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தி வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரதமர் பதவி தொடர்பில் எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் உரசல்களை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது நடந்து வரும் இந்த சர்ச்சைகளால் ஏற்பட்டிருக்கும் உரசல்கள் சோர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்தப் பிரச்சனையை வாக்காளர்களின் விருப்பத்திற்கே விட்டு விடலாம் என்றார் அவர்.

இதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நமது ஆற்றல் முழுவதையும் தேர்தல் பணிகளின் மீது செலுத்தவேண்டும். மக்களின் ஆதரவைப் பெறவேன்டும் என்று அன்வார் கூறினார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS