பொதுத் தேர்தல்: வேட்பாளர்கள் தயார்! -மசீச அறிவிப்பு

அரசியல்
Typography

தங்காக், ஜூன்.19-  அடுத்துவரும் பொதுத் தேர்தலுக்காக  வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து விட்டோம்.. இதில் 50 விழுக்காட்டு வேட்பாளர்கள் புதிய முகங்கள் என்று மசீசவின் தலைவர் டத்தோஶ்ரீ லியோவ் தியோங் லாய் அறிவித்தார்.

இப்படி புது முகங்களையும் பழைய முகங்களையும் கலந்து வேட்பாளர்களாக நிற்க வைப்பது சிறந்த உத்தியாகும். மேலும், மசீச அடுத்த பொதுத் தேர்தலைச் சந்திக்க முழுமையாக ஆயுத்தமாகிவிட்டது என்று அவர் சொன்னார்.

கட்சி உறுப்பினர்களின் இடையில் நடத்தப்பட்ட ஆய்வின் வழி இந்தப் புது வேட்பாளர்களின் தேர்வு நடத்தப்பட்டது என்று லேடாங் ம.சீ.ச  ஆண்டுப் பொதுக்கூட்டத்தைத் தொடக்கி வைத்த போது அவர் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் தேர்வானது எந்தவொரு சுய விருப்பு வெறுப்புமின்றி, ஆய்வின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார் மேலும், மசீச தனது சிறந்த கொள்கைகளால் மக்களின் அதிகபட்ச நம்பிக்கையைப் பெற்றுவிட்டது என்பது கட்சியின் சாதாரண தலைவர்களின் கருத்திலிருந்து தெரிவருகிறது என்று குறிப்பிட்டார்.

ஆனால், ஜசெக, இதற்கு முரணாக இருக்கிறது. இக்கட்சி 2008-ஆம் ஆண்டு தொடங்கி பலமுறை சறுக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததையும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததையும் உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். இதனால் ஜசெக தொடர்ந்து ஒரு கொள்கையற்றக் கட்சி என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது என்று டத்தோஶ்ரீ லியோ கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS