கோலாலம்பூர்,  16 மார்ச் -  மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் உரை நிகழ்வொன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 மலாயாப் பல்கலைக்கழகத்தின் மாணவர் மன்றம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதிலிருந்து மீட்டுக்கொண்டதாக   மலாயாப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மாணவர் மன்றத் தலைவர் சுஹாயில் வான் அன்வார் தெரிவித்தார். 

"இணை ஏற்பாட்டாளரான எங்களிடம் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் பல்கலைக்கழக மாணவர் மன்றம் இந்நிகழ்வை மீட்டுக்கொண்டது, மகாதீரின் உதவியாளர் மேற்கொண்ட தொலைப்பேசி அழைப்பின் போது தெரிய வந்தது" என அவர் தெரிவித்தார். 

கோலாலம்பூர், மார்ச் 15- ‘மலேசியாவை காப்பாற்றுவோம்எனும் பெயரில், மார்ச் 28ஆம் தேதி பிரசார இயக்கத்தை நாடுதழுவிய அளவில் மேற்கொள்வதற்கு பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி முடிவு செய்துள்ளது.

 

இந்தப் பிரசார இயக்கத்தின் தொடக்கமாக, அம்பாங் ஜெயா மாநகர மன்றத்திடலில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று அமானா நெகாரா கட்சியின் தலைவரான மாட் சாபு, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உரைகளுடன் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளனஎன்று அவர் கூறினார்.

 

அதுமட்டுமின்றி, இந்நிகழ்வில், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் மற்றும் அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ ஷாபி அப்டல் ஆகியோர் கலந்து கொள்வர்என்றார் அவர்.

 

டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட வேண்டும், டத்தோஶ்ரீ நஜிப், பிரதமர் பதவிபிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையின் கீழ் இந்தப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதுஎன்று மாட் சாபு சொன்னார்.

 

இதனை அடுத்து, ஜொகூர் கெலாங் பத்தாவில் ஏப்ரல் 16ஆம் தேதியும் கெடாவில் மே 7ஆம் தேதியும் இந்தப் பிரசார இயக்கம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

 

 

 

 

கூச்சிங், 15 மார்ச் -   பிரதமர் ஒரு ஈபானிய பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என தாம் கூறியது,  யாரையேனும் மனதைப் புண்படுத்தியிருந்தால் தாம் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக டான் ஶ்ரீ அட்னான் சாத்தெம்  தெரிவித்துள்ளார்.  தாம் அதனை ஒரு நகைச்சுவையாகத் தான் கூறினேன். மாறாக எந்தவொரு உள்நோக்கத்துடனும் கூறவில்லை என சரவாக் மாநில முதலமைச்சருமான டான் ஶ்ரீ அட்னான் சாத்தேம்  தெரிவித்தார். 

"ஆனால், நான் கூறிய இக்கருத்து யாருக்காவது   தவறாகப் பட்டால், அதற்காக  நான் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற    இலக்கவியல் நாடாக மலேசியாவை மாற்றுவோம் என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில்  அட்னான் நகைச்சுவையாக பிரதமர் நஜீப் ஒரு ஈபானிய பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கூச்சிங்,  12 மார்ச்-   அண்மையில்  நாட்டின் முன்னால் பிரதமர் தொடக்கி வைத்த மக்கள் தீர்மானம்  உள்நோக்கம் கொண்டது என  டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.  

துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான  அந்த  குழுவிற்கு,  நாட்டின் கிழக்குப் பகுதியான சரவாக்கிலிருந்து பிரதிநிதித்துவம் எதுவும் இல்லாததால், அதனை மக்கள் தீர்மானம் எனக் கூறிவிட முடியாது என  டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.   

"மக்கள் தீர்மானம்"   என்ற  பெயரில் மக்களைக்  குழப்ப வேண்டாம். மக்கள் தீர்மானம் என்ற பெயரில் உள்நோக்கம் வேண்டாம். நீங்கள் செய்தது மக்களுக்காக அல்ல, உங்களுக்காக" என அவர் தெரிவித்தார். 

கோலாலம்பூர், 12 மார்ச்- அரசியல் கொள்கை முரண்பாடுகளைக் காரணம் காட்டி  நாட்டின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை பெட்ரோனாஸ் நிறுவனத்திலிருந்து நீக்கியது  மூலம் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பி.கே.ஆர் தெரிவித்துள்ளது. 

 துன் டாக்டர் மகாதீர் முகமது இனி  அரசாங்கத்திற்கு ஆதரவாக இல்லை என  பிரதமரே தெரிவித்திருப்பது  அதிர்ச்சியளிப்பதாக பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர்  என்.சுரேந்திரன் தெரிவித்தார். 

 கடந்த வாரம், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து மக்கள் தீர்மானத்தைப் பிரகடனம் செய்ததால், துன் டாக்டர் மகாதீரைப் பெட்ரோனாஸ்  நிறுவனத்திலிருந்து நீக்குவதாகப் பிரதமர் துறை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.   

 "சம்பந்தப்பட்ட   அந்த தீர்மானம் அரசாங்கத்தை அவமானப்படுத்துவதாகவும்,  சட்டத்திற்கும் அரசியலமைப்புக்கும்  எதிரானது" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 துன் டாக்டர் மகாதீர் முகமது, கடந்த 2003-ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகியப் பிறகு  பெட்ரோனாஸின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி  கடந்த ஜூன் 2014-ஆம் ஆண்டு முதல்  புரோட்டோன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோலாலம்பூர், மார்ச் 7-நல்லெண்ணத்தையும் சமூக ஒழுங்கையும் கட்டிக் காக்கும் படி மலேசியர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் நினைவுறுத்தினார்.

இனவாதத்தை சில தரப்பினர் கிளப்புகின்றனர். சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி, பொய்களையும் தீவிரவாதக் கருத்துக்களையும் தேச நிந்தனைத் தன்மையுடைய அம்சங்களையும் பரப்புகின்றனர் என்று பேரரசர் சுட்டிக்காட்டினார்.

இன்று 13ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடரைத் தொடக்கி வைத்து அவர் உரையாற்றினார்.

இத்தகைய செயல்களை உடனடியாகக் கட்டுப்படுத்தப்படவேண்டும். சம்பந்தப்பட்ட அரசு துறைகள் இவற்றைச் சமாளிக்க உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பல இன மக்களைக் கொண்ட இந்த சமுதாயத்தில், உரிய நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபடாவிடில், சச்சரவுகளுக்கும் பெரும் மோதல்களுக்கும் வித்திட்டுவிடும் என்று பேரரசர் கூறினார்.

கோலாலம்பூர், மார்ச் 7- அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா, தாம் ஒருபோதும் மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை என்றும்  தமக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக இன்று நாடாளுமன்றத்தில் “அவரது பெயர் ஏன் மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திடுவோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது?” என செய்தியாளர்கள் கேட்டபோது, தமக்கு அது குறித்து எதுவும் தெரியாது என அவர்  தெரிவித்தார்.  

“நான் அங்கு போகவில்லை, நான் ஆதரிக்கவும் இல்லை, எனக்கு அது குறித்து எதுவும் தெரியவும் தெரியாது” என அவர் தெரிவித்தார். 

இதனிடையே நஜீப்புக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரம் ஒன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, துங்கு ரசாலி பிரதமர் நஜீப் நாட்டை நல்வழிப்படுத்துவதால் அவருக்குத் தாம் முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

 

 

 

More Articles ...