கோலாலம்பூர், 23 மார்ச்-    2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்களா வாங்கிய விவகாரத்தில்  பினாங்கு மாநில முதலமைச்சர் லிம்  குவான் எங் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை முடியும் வரை விடுப்பில் செல்ல வேண்டும் என மூத்த அரசியல்வாதி தெங்கு ரசாலி ஹம்சா தெரிவித்துள்ளார்.  

"பதவி துஷ்பிரயோகம்  அல்லது ஊழல் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் விடுப்பில் செல்வது மூலம் அதிகாரிகள் முறையான விசார ணையை மேற்கொள்ள முடியும்" என்றார் அவர்.  அவர் எங்கு வேண்டுமானாலும் உல்லாச சுற்றுலா சென்று வரட்டும்" என குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

"இதைதான் லிம் மற்றவர்களிடம் அடிக்கடி கூறுவார் . இனி அவரைப் பொறுத்தது. இந்த விவகாரத்தில் என்ன செய்யவேண்டும் என்பது அவ  ருக்குதான் தெரியும்" என பியுஃபோர்ட்  நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அசிசா முகமது டுன் தெரிவித்தார்.  

முன்னதாக கடந்த வியாழக்கிழமை, பின்ஹார்ன் சாலையில்  லிம் குவாங் எங் 2.8 மில்லியன் மதிப்பிலான பங்களா வீடு ஒன்றை வாங்கியது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சாபுடின் யாஹ்யா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் இவ்விவகாரம் தொடர்பில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. 

பெட்டாலிங்ஜெயா, 23 மார்ச்-   ஊழலில், பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்  இரண்டாவது நிலையை வகிப்பதாக பக்காத்தான்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா போலியான டைம்ஸ் இதழ் அட்டையை உருவாக்கியதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

எனினும், அது போலியானது என்பது தமக்கு அறவே தெரியாது என்றும்,  முகநூலில் தாம் பதிவு செய்த அந்த போலி டைம்ஸ் இதழ் அட்டையை அகற்றவிருப்பதாகவும் ஆர்.சிவராசா தெரிவித்தார். 

கோலாலம்பூர், மார்ச் 23- பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பை நீதிமன்றத்திற்கு இழுக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் முடிவானது, தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அஷலினா ஒத்மான் தெரிவித்தார்.

சட்டப்பூர்வ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது,  துஷ்பியோகம் செய்தது ஆகிய காரணங்களை முன்னிட்டு துன் மகாதீரும் இதர இருவரும் பிரதமர் நஜிப் வழக்குத் தொடுத்துள்ளனர்.

"இது குறித்து நான் அதிர்ச்சி அடைந்தேன்  ஆனால், ஆச்சர்யம் அடையவில்லை" என்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் அவர் தெரி வித்தார். இது தொடர்பாக, தாம் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிடவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இதனிடையே, பிரதமரை நீதிமன்றத்திற்கு இழுக்கும் உரிமை துன் மகாதீருக்கு இருக்கிறது என்று அம்னோவின் மூத்த தலைவரான  துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார்.

தம்முடைய கடமைச் சரிவரச் செய்யவில்லை என்று கருதப்படும் பொது அதிகாரி மீது, வரிச் செலுத்துகிற ஒருவர் என்ற முறையில் துன் மகாதீர் வழக்குத் தொடுக்கலாம் என்றார் அவர்.

தங்கள் கடமையைச் சரியாகச் செய்யாத ஓர் அமைச்சர் மீதோ அல்லது ஒரு பொது அதிகாரி மீதோ யாரும் வழக்குத் தொடுக்கலாம் என்று குவாங் மூசா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி  சொன்னார்.

கோலாலம்பூர், மார்ச் 23-  பொதுச்சேவைத் துறையில் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம்  செய்தார் என்ற அடிப்படையில் டத்தோ ஶ்ரீ நஜீப் மீது   முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 இந்த வழக்கில் மகாதீரோடு முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர் அனினா சாடுடின் மற்றும் முன்னாள் பத்து கவான் தொகுதி அம்னோ உதவித்தலைவர் கைருடின் அபு ஹசான் ஆகிய இருவரும் மனுதாரர்களாக இணைந்துள்ளனர்.தங்கள் மனுவில் அவர்கள் நஜிப்பை ஒரே பிரதிவாதியாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

புத்ராஜெயா. 21 மார்ச்- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர், 100  மில்லியன் ரிங்கிட்  மோசடி செய்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், கைரி ஜமாலுடின் கூறினார்.

56 வயதுடைய அந்த அதிகாரி,கடந்த 6 ஆண்டுகளாக 100 மில்லியன் ரிங்கிட் ஊழல் புரிந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்ட்தையடுத்து, நேற்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து கைரி ஜமாலுடின் கூறுகையில், கடந்த 2 வாரங்களாக ஊழல் தடுப்பு ஆணையத்தினர், அந்த அதிகாரியின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்துள்ளனர்.

தனது அமைச்சின் முழு ஒத்துழைப்போடு, ஊழல் தடுப்பு ஆணயம், அந்த அதிகாரியை எளிதாகவும் விரைவாகவும் கைது செய்துள்ளதாக அவர்  இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.விசாரணையின் அடிப்படையில், தொடர்  நடவடிக்கை எடுப்பது, ஊழல் ஆணையத்தில் பொறுப்பு என அவர் மேலும் கூறினார்.ஊழல், மோசடி செய்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக, என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைப்பேன் என அவர் உறுதி அளித்தார்.

இம்முறைகேடு தொடர்பில் மேலும் 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக, ஊழல் தடுப்பு ஆணையத் தலைமை அதிகாரி கூறினார்.

கோலாலம்பூர், மார்ச் 21- சபா மாநிலத்தில் சூலு சுல்தான் ஆட்சியை நிலைநாட்ட மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் தலா ஒரு தளப தியை சூலு பயங்கரவாதிகள் நியமித்திருப்பதாக இடைகாலத் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அம்பலப்படுத்தியுள்ளார்.

சபாவில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 6 சந்தேகப் பேர்வழிகளிடம் நடத்திய விசாரணைகளில் இருந்து இந்தத் தகவல் கிடைத் ததாக அவர் சொன்னார்.

மேலும், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கணினிப் பதிவு மற்றும் பல ஆவணங்களில் இருந்தும் தகவல்கள் கிடைத்தாக டத்தோஶ்ரீ ஸாஹிட் தெரிவித்தார்.

சூலு சுல்தான் ஆட்சியை சபாவில் உருவாக்குவதற்காக, மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தளபதியை சூலு சுல்தான் நியமித்திருப்பதாக புலன் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது அவர் கூறினார்.

சூலு பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை நாம் எளிதானதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்களால் நாட்டுக்கே  மிரட்டல் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

குவாந்தான், மார்ச் 19- வேண்டுமென்றே தம்முடைய பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த நினைக்கும் சிலரால், தாம் சித்தரிக்கப்படுவதைப் போல, நான் மக்களின் உடமைகளை அபகரிக்கும் ஒரு திருடனல்ல என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.

 

ஒருவேளை, நான் அப்படி அபகரிக்க நினைத்திருந்தால், பகாங்கில் இருக்கும் காடுகளை வெகுகாலத்திற்கு முன்பே அபகரித்து இருக்கலாம். ஆனால், நான் அப்படிச் செய்ததில்லை. ஒரு அங்குலத்தைக் கூட, ஒரேயொரு மரத்தைக் கூட நான் எடுத்துக் கொண்டது கிடையாது என்று பிரதமர் சொன்னார்.

 

“நான் பிரதமராகப் பதவியேற்ற பின்னரும் எனது கொள்ல்கையை நான் மாற்றிக்கொண்டது கிடையாது. நான் மக்களின் சொத்தைத் தொடமாட்டேன். என்னைக் கெட்டவனாக நினைக்காதீர்கள்.  மக்கள் உடமையை அபகரிப்பவன் என்று எண்ணாதீர்கள். நான் மக்களின் பிரதமர்” என்றார் அவர்.

 

இங்குள்ள அரச மலேசிய விமானப் படைத் தளத்தில் நடந்த ஒற்றுமைச் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்தச் சந்திப்பில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பிரதமருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

 

 

More Articles ...