கோல செபாத்தாங்கில் பீதி! நாய்கள் மடிந்து போகும் மர்மமென்ன?  

சமூகம்
Typography

தைப்பிங், ஜூலை.17- கோல செபாத்தாங் மீனவர்பிடி கிராமத்தில் உள்ள சுமார் 60 நாய்கள் வரை மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக அக்கிராமத்தைச் சேர்ந்த மீனவர் லீ ஷாய் ஹுவாட் என்பவர் தெரிவித்தார். 

லீயின் மகளையும் அவரது அக்காவின் மகளையும் வெறிநாய் நாய் கடித்தது தொடர்ந்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் அப்பகுதியில் நாய்கள் மர்மமாக மடிந்து வருவதாக அவர் தெரிவித்தார். 

மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்னர், கோலா செபாத்தாங்கிலுள்ள ஆற்றுப்பகுதிக்கு அருகே அமைந்திருந்த வீடுகள் மற்றும் மீன் சேகரிப்புப் பகுதிகளில் சுமார் 50 முதல் 60 தெருநாய்கள் சுற்றி திரிந்துக் கொண்டிருந்தன. 

காலப்போக்கில் அந்தத் தெருநாய்கள் கடிக்க தொடங்கின. முதலில் அந்த நாய்களின் உரோமங்கள் உதிர ஆரம்பித்ததாகவும் பின் அதன் அவை தெருக்களில் இறந்துக் கிடப்பதை பார்த்ததாகவும் அவர் சொன்னார்.

இதனை ஒரு பொருட்டாக கருதாததால் அந்தக் கிராமத்து மக்கள் எந்தப் புகாரும் செய்யவில்லை என்று லீ நேற்று கூறினார்.

தனது 11 வயது மகள் லீ ஷுயெ ஃபென் மற்றும் தனது அக்காவின் 12 வயது மகள் லீ ரோவ் ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் வளர்த்த நாய் திடிரெனக் கடித்துவிட்டது.

வெறிநாய்த் தொற்றுக் கிருமிகளால் அந்த நாய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததால் இந்தச் சிறுமிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றனர். இவர்களை வெறி நாய்த் தொற்றுக் கிருமிகள் தாக்கவில்லை என்பது சிகிச்சையின் போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி ஷுயெ ஃபென் என்ற அந்தச் சிறுமிக் குறிப்பிட்ட போது  தங்களின் வீட்டில் வளர்க்கப்பட்ட அந்த நாய் கடிக்க முற்பட்டபோது தடுக்க முயன்றும் பல தடவைத் தன்னைக் கடித்து காயத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறினார்.

மூன்று மணி நேரம் கழித்து, தன் மீதும் பாய்ந்து தாக்க ஆரம்பித்தாக லீ ரோவ் என்ற மற்றொரு சிறுமி தெரிவித்தார். தன் வீட்டு நாயை மற்றொரு தெரு அண்மையில் கடித்த சம்பவத்தை சிறுமியின் தந்தை ஷாய் ஹுவாட் நினைவு கூர்ந்தார்.

பகலில் சுற்றித் திரியும் தெருநாய்கள் இரவில் மாயமாய் மறைந்துப் போகின்றன. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தெருநாய்களை ஒழிக்க அதிகாரத்தில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதியில் உள்ள சிலர் கூறினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS