12 வயது சிறுமிக்கு ‘அயர்ன் பாக்ஸ்’சினால் சூடு! கொடுமைக்கார தம்பதிகள் கைது!

World
Typography

யங்கூன், ஜூலை.17- வீட்டுவேலை செய்துவந்த 12 வயது சிறுமியை ‘அயர்ன் பாக்ஸ்’சினால் சூடுவைத்து கொடுமைப் படுத்திய கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர். 

பல பகுதிகளில், வறுமைக்குள்ளான இளம் சிறுவர் சிறுமிகள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மற்றவர் வீட்டில் உதவியாளர்களாக வீட்டு வேலை செய்து வருகின்றனர். 

அப்போது அங்கு, அந்த சிறுவர் சிறுமியர்கள் அடிக்கடி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில், மியான்மார் நாட்டின் யங்கூன் நகரை சேர்ந்த தம்பதியரான துன் துன் (வயது 32), மய்த் நொயி (வயது 30), ஆகியோர் தங்களது வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை ‘அயர்ன் பாக்ஸ்’சைக் கொண்டு பலமுறை சூடு வைத்துள்ளனர். 

மேலும், சுடு தண்ணீரை அவர் மீது ஊற்றுவது என பல்வேறு கொடுமைகளை செய்து வந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட ‘அக்கம் பக்கம்’ வீட்டில் வசிப்பவர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து போலீஸ்  அவர்கள் வீட்டிற்கு சென்ற போது, அங்கு வேலை பார்த்து வந்த சிறுமியின் நிலைமை தெரியவந்தது, பின்பு அந்த தம்பதிகளை, போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS