21வயது பெண் மானபங்கம்: ஜசெக பிரமுகர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

சமூகம்
Typography

 ஜார்ஜ் டவுன், ஜூலை.17– கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இரவு விடுதி ஒன்றில் கல்லூரி மாணவியும் பகுதி நேரக் கேளிக்கை மைய பணிப்பெண்ணுமான 21 வயதுடைய இளம் பெண்ணை மானபங்கப் படுத்தியாகக் கைது செய்யப்பட்ட ஜசெக பிரமுகர் ஒருவர் மீது நாளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும். 

ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்பு உதவியாளர் எனக் கருதப்படும் அந்த 50 வயதுடைய முன்னாள் கவுன்சிலர், கடந்த ஜூலை 6ஆம் தேதி இரவு 11 மணியளவில் இரவு விடுதியை ஒட்டியுள்ள கார் நிறுத்துமிடத்தில் அந்தப் பெண்ணை மானபங்கப் படுத்தியதாக கூறப்பட்டது.

குடித்திருந்த அந்த நபர், தன்னை கார் நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

தான் அந்த நபரை எதிர்த்து போராட முயன்று தோல்வி கண்டதாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இரண்டு நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த ஜசெக பிரமுகருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 354 ஆவது பிரிவின் கீழ் மானபங்கம் செய்யும் நோக்கத்துடன் கட்டாயப்படுத்தியதாக விசாரிக்கப்பட்டு நேற்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS