PTPTN கடனை செலுத்த மறுத்துவிட்டு காரும், வீடும் வாங்குவதா? -அமைச்சர்

சமூகம்
Typography

 கோலாலம்பூர், ஜூலை 17- உயர் கல்விக் கூடங்களில் படிக்க அரசாங்கம் வழங்கிய கல்வி கடனுதவியை (PTPTN) திரும்பச் செலுத்துவதில் பெரும்பாலானவர்கள் அலட்சியப் போக்கு காட்டுவது அரசாங்கத்திற்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என உயர்கல்வி அமைச்சர் டத்தோஶ்ரீ இட்ரிஸ் ஜூசோ கூறினார்.

மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில் நமது அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்த அரிய வாய்ப்பு இந்த (PTPTN) கடனுதவியாகும். எனினும், அதனைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் கல்வியை முடித்த பிறகும், தாங்கள் பெற்ற உதவித் கடனை மீண்டும் செலுத்த மறுக்கின்றனர் என்றார் அவர்.

அவ்வாறு மறுக்கும் தரப்பினர் வீடு, கார் போன்ற சொத்துக்களை வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கலாகவே இருக்கின்றனர் என பேங்க் நெகாரா செய்த ஓர் ஆய்வில் அம்பலமாகியுள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.

வீட்டுத் தவணை, கார் தவணை, கிரேடிட் கார்டு என்று இதற்கெல்லாம் செலவு செய்ய பணபலம் கொண்ட அவர்கள், ஏன் பிடிபிடிஎன் கல்வி கடனுதவியைச் திரும்பச் செலுத்த மறுக்கின்றனர் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS