கிரேன் சாய்ந்தது; அடியில் சிக்கி இரு ஆடவர்கள் பலி!

சமூகம்
Typography

கோத்தா சமாரன், ஆக.12- குடியிருப்பு கட்டுமானப் பகுதியில் பொருட்களைத் தூக்கி கொண்டிருந்த கிரேன் ஒன்று திடீரென சாய்ந்ததில் அங்கு வேலைச் செய்துக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் இயந்திரத்தின் அடியில் சிக்கி பலியாகினர்.

நேற்று மாலை 3.50 மணியளவில் கோத்தா சமாரன்னில் உள்ள தாமான் கெபிட்டல் தஞ்சோங் துவாங் குடியிருப்பு பகுதியில் இத்துயர சம்பவம் நடந்தது. இதில் கம்போங் மெலாயுவைச் சேர்ந்த முகமட் பேக் (வயது 49), மோயான் லிடாங் பகுதியைச் சேர்ந்த ஹெலென் ஆகிய இருவரே மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இயந்திரத்தின் அடியில் சிக்கிய இரு தொழிலாளர்களின் உடலை மீட்க போராடினர். அதிக எடைக் கொண்ட இயந்திர பாகத்தின் அடியில் ஹெலனின் உடல் சிக்கி கொண்டதால் தீயணைப்புப் படையினர் இரும்பினை வெட்டி பின்னர் உடலை எடுத்தனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS