இளம் சகோதரிகள் கற்பழிப்பு; தாத்தா, அப்பன், உறவுக்காரன் கைது

சமூகம்
Typography

 

கூச்சிங், ஆக12- 19 வயது இளம்பெண் மற்றும் 14 வயதுடைய அவருடைய சகோதரி ஆகிய இருவரையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக சொந்த தாத்தா, அப்பா மற்றும் இரு உறவுக்காரர்கள்ளாகிய நால்வரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

அடையாளம் குறிப்பிடப்படாத அந்த பெண்ணிடம் 13 வயதிலிருந்தே சம்பந்தப்பட்ட நான்கு காமுகர்களும் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இந்தக் கொடுமையான சம்பவம் செரியானில் இருக்கும் கம்போங் டாஹா செரோபான் என்ற இடத்தில் நடந்துள்ளது.

இதனிடையே, அந்த நான்கு ஆசாமிகளின் மீதும் நேற்று மதியம் 2.30 மணியளவில் புகார் கிடைத்தது என்று சரவாக் போலீஸ் துணை ஆணையர் டத்தோ தேவ் குமார் தெரிவித்தார்.

மருத்துவமனையில்ல் அனுமதிக்கப்பட்டிருக்கும் 19 வயது பெண் தற்போது கர்ப்பமாக உள்ளார். தன்னுடைய 14 வயது தங்கையையும் அந்த ஆசாமிகள் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறினார். சகோதரியை அவர்கள் 9 வயதிலிருந்தே பலாத்காரம் செய்து வந்துள்ளனர் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து சுமார் 26 வயதிலிருந்து 57 வயதுக்குட்பட்ட அந்த நால்வரையும் நேற்று மாலை 3.30 மணிக்கு போலீசார்  கைது செய்தனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS