சீ விளையாட்டு தீபம் தேசிய அரங்கை வந்தடைந்தது!

சமூகம்
Typography

புக்கிட் ஜாலில் , ஆக.12- வரும் ஆகஸ்டு மாதம் 19ஆம் தேதி தொடங்கவிருக்கும் கோலாலம்பூர் சீ விளையாட்டை முன்னிட்டு, இன்று காலை நடைப்பெற்ற ‘பிட் மலேசிய’ நிகழ்ச்சியில் சீ விளையாட்டு தீபம் வெற்றிகரமாக புக்கிட் ஜாலில் தேசிய அரங்கை வந்தடைந்தது. வானிலை சீராக இல்லாவிட்டாலும் 5 ஆயிரம் மக்கள்  திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பண்டார் துன் ரசாக் அம்னோ தலைவர் டத்தோ ரிசால்மான் ஒத்மான் மற்றும் மலேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவர் துவாங்கு இம்ரான் துவாங்கு ஜாபார் ஆகிய இருவரும் இணைந்து சீ விளையாட்டு தீபத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுடினிடம் ஒப்படைத்தனர்.

சீ விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் தேசிய விளையாட்டாளர்களுக்கு மக்கள் திரண்டு வந்து தங்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும் எனக் கைரி கேட்டுக்கொண்டார். நமது நாடு கிட்டத்தட்ட 111 தங்கப் பதக்கங்களை வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றார் அவர். 
இந்த தீப ஓட்ட நிகழ்ச்சில் திரண்ட மக்களின்வழி சீ விளையாட்டிற்கான மலேசிய மக்களின் ஒருமித்த ஆதரவு நன்கு வெளிப்பட்டுள்ளது என்று கைரி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சீ விளையாட்டுப் போட்டிக்கான மலேசியக் குழுவின் தலைவர் டத்தோ மரினா சின்னும் பங்கேற்றார் குறிப்பிடத்தக்கது.

மெக்டோனல்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘பிட் மலேசியா’ ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் 5 கிலோமீட்டர் மற்றும் 10 கிலோமீட்டர் ஓட்டமும் 10 கிலோமீட்டர் மற்றும் 30 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டமும் இடம்பெற்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS