முதலாளிகளுக்கு இனி பிரம்படி தண்டனை விதிக்கப்படுமா?

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், ஆக.19- சட்ட விரோதமாக கள்ளக் குடியேறிகளை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளுக்கு இனி பிரம்படி தண்டனையும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ முஸ்தபர் அலி அறிவித்துள்ளார்.

கூடிய விரைவில் குடிநுழைவுத் துறைக்கும் சட்டத்துறை தலைமை அலுவலகம், தலைமை நீதிபதிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. சட்டவிரோத வேலையாள்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்குப் பிரம்படித் தண்டனை விதிப்பதைப் பற்றியும். கைது செய்யப்படும் கள்ளத்  தொழிலாளிகளின் நீதீமன்ற விசாரணையை விரைவு படுத்துவதைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 55பி-க்கு கீழ் போதிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டவரை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளிகளுக்கு 10 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதமோ, அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டையோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று முஸ்தபர் அலி தெளிவுபடுத்தினார்.

அதே சட்டத்தில் ஒரு முதலாளி ஐந்துக்கும் மேற்பட்ட சட்ட விரோத தொழிலாளிகளை  கொண்டிருந்தால் அவருக்கு 6 மாதத்திலிருந்து 5 வருடம் வரை சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக 6 பிரம்படியும் விதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS