AES -சம்மன்களை கட்டத்தவறினால் நீதிமன்ற நடவடிக்கை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஆக.19- சாலைக் குற்றங்களைப் புரிவோருக்கு எதிராக  தானியங்கி அமலாக்க முறையின் கீழ் (automated enforcement system-AES) அனுப்பும் சம்மன்களை கட்டத் தவறியவர்களின் மீது இனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு முன்னர், தானியங்கி அமலாக்க முறையில் கீழ் அனுப்பப்படும் சம்மன்களைச் செலுத்த மறுக்கும் நபர்களின் மேல் சட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதில்லை. ஆனால், இனி அவ்வாறு கிடையாது. சம்மன்களை செலுத்த மறுப்பவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலை போக்குவரத்து துறையின் தலைமை இயக்குனர் டத்தோஶ்ரீ நஜ்ரி சீரோன் குறிப்பிட்டார்.

பொதுவாக, இந்தத் தானியங்கி அமலாக்க முறையின் கீழ் 150 ரிங்கிட்  சம்மன் விதிக்கப்படும். அதனைக் கொடுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் கட்டிவிட்டால் சிக்கல் எழாது. தவறினால், அவர்களின் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க்கப்படும். மேலும் அவர்களுக்கு 2 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

சாலையின் வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, சிவப்பு விளக்கில் நிற்காமல் பயணிப்பது போன்ற குற்றங்களைப் புரியும் போது தானியங்கி சிறப்புக் கேமிராக்கள் மூலம் பிடிக்கப்படும் படங்களின் அடிப்படையில், தானியங்கி அமலாக்க முறையின் கீழ் சம்மன்கள் அனுப்பப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS