நட்புக்குரிய பங்காளி மலேசியா! -அதிபர் டிரம்ப் பாராட்டு

சமூகம்
Typography

வாஷிங்டன், செப்.13 – கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியா தனது நட்புக்குரிய பங்காளியாக திகழ்ந்து வருவதற்கு அமெரிக்கா நன்றி பாராட்டுகிறது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் வெள்ளை மாளிகை வருகைப் பற்றிக் குறிப்பிட்ட போது டிரம்ப் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். 

அமெரிக்காவின் முக்கியமான வர்த்தக மற்றும் முதலீட்டுப் பங்காளியாக மலேசியா விளங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து 4,200 கோடி ரிங்கிட் மதிப்புடைய விமானங்களை வாங்குவதற்கு மலேசியா இணங்கி இருப்பதை அவர் மேற்கோள் காட்டினார்.

"நீங்கள் இங்கே வந்திருப்பது எங்களுக்குக் கிடைத்த கௌரவம்" என்று பிரதமர் நஜிப்பிடம் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். இஸ்லாமிய தீவிரவாதக் கும்பலான ஐ.எஸ். அமைப்பைக் கட்டுப்படுத்தும் அனைத்துலக முயற்சிகளில் மலேசியா முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் அவர் சொன்னார். 

இது குறித்து கருத்துரைத்த பிரதமர் நஜிப், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மலேசியா மிகத் தீர்க்கமாக இருந்து வருகிறது என்று தெரிவித்தார். ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் அமெரிக்காவின் திட்டத்தில் நம்பகமான கூட்டாளியாக மலேசியா இருந்து வரும் என்று தாம் ஏற்கெனவே அளித்த உறுதிப்பாட்டை  அதிபர் டிரம்பிடன் பிரதமர் நஜிப் நினவு கூர்ந்தார்..

அதிபர் டிரம்புக்கும் பிரதமர் நஜிப்புக்கும் இடையிலான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த பேச்சுகள் குறித்த விபரம் பின்னர் செய்தியாளர்களுக்கான இருநாடுகளின் கூட்டுச் சந்திப்புக் கூட்டத்தில் அறிவிக்கப்படும். 

BLOG COMMENTS POWERED BY DISQUS