இந்தியர்களுக்காக 200 கோடி யுனிட் டிரஸ்ட் பங்குகள்!- சுப்ரா

சமூகம்
Typography

புத்ராஜெயா, செப்.13 – அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மலேசிய இந்திய சமுதாயத்திற்காக 200 கோடி யுனிட் டிரஸ்ட் பங்குகள் ஒதுக்கப்படும் என்று மலேசிய இந்தியர்களின் 'புளூபிரிண்ட்' வளர்ச்சிக் திட்டக் குழு (எம்.ஐ.பி) பெரிதும் எதிபார்க்கிறது என மஇகா தேசிய தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் பெருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில், இருவேறு பிரிவுகளின் கீழ் பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் இந்த யுனிட் டிரஸ்ட் பங்குகளைத் திரந்து விடும் என்று அவர் சொன்னார்.. 

சேமிப்பு மீதான நீண்ட கால கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் முதலீடுகளில் பங்கேற்கும் நோக்கிலும் இது போன்றதொரு முயற்சி, முதன் முறையாக மேற்கொள்ளப் படவிருக்கிறது என்று டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.

புளூபிரிண்ட் தொடர்புக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் மேற்கண்ட விபரத்தை அவர் தெரிவித்தார். 

இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டு திட்ட அமைப்பான செடிக்கிற்கும் பெர்மோடலான் நிறுவனத்திற்கும் இடையே, இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. விரைவில் இதற்கான வழிமுறைகள் முழுமைப் படுத்தப்படும் என்றார் அவர். 

குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் பி-40 தரப்பினருக்கு யுனிட் டிரஸ்ட் பங்குகள் வாங்குவதற்கு 20 விழுக்காடு உதவி மானியம் வழங்கப்படுவதோடு, வட்டி இல்லாத கடனுதவியும் வழங்கும் ஆலோசனை திட்டமும் ஆராயப்பட்டு வருகிறது. இதன் தொடர்பில் பிரதமர் நஜிப்பின் ஒப்புதலுக்காக தாங்கள் காத்திருப்பதாக டாக்டர் சுப்பிரமணியம் சொன்னர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS