இளம் தாதியைத் தொடக் கூடாத இடத்தில் தொட்ட "டத்தோ" கைது! 

சமூகம்
Typography

பெட்டாலிங் ஜெயா, செப்.13– இளம் தாதி ஒருவரை மானபங்கம் படுத்தியதாக 'டத்தோ' அந்தஸ்து கொண்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இங்குள்ள சுபாங் ஜெயா மருத்துவமையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த மருத்துவமனையில், தனியார் வாட்டில், அந்த 'டத்தோ' சம்பந்தப்பட்ட தாதியிடம் இத்தகைய விஷமத்தனத்தில் ஈடுபட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. 

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அந்த டத்தோ சேர்க்கப்பட்டிருந்தார். மிக முக்கிய நிலச் சொத்துடமை மற்றும் முதலீட்டு நிறுவனம் ஒன்றில் தலைமைச் செயல்நிலை அதிகாரியாக அந்த டத்தோ பதவி வகித்து வருகிறார்.

19 வயதுடைய இளம் தாதியின் பிட்டம் மற்றும் மார்பகத்தில் கைகளை வைத்ததோடு, கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்ட்தால், அதிர்ச்சி அடைந்த அந்தத் தாதி, இது குறித்து போலீஸ்சில் புகார் செய்ததாக சிலாங்கூர் மாநில குற்றப் புலனாய்வுத் தலைவர் பட்ஷில் அகமட் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அந்த டத்தோ கைது செய்யப்பட்டார். போலீசார் மேற்கொண்டு புலன் விசாரணை செய்வதற்காக அவரை 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

 

 

 
BLOG COMMENTS POWERED BY DISQUS