லஞ்சப் புகார்: உதவியாளர்கள் கைது: 'அரசியல் சதி' என்கிறார் சிவராசா!

சமூகம்
Typography

கோலாலம்பூர், செப்.22- லஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் தம்முடைய சேவை மையத்தில் பணிபுரிந்த மூவரை லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்திருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று சுபாங் தொகுதி எம்.பி., சிவராசா  கண்டனம் செய்தனர்.

குடிநுழைவுத் துறை சம்பந்தப்பட்ட புலன் விசாரணை தொடர்பில் நிறுவன இயக்குனர் ஒருவரிடமிருந்து லஞ்சம் பெற முயன்றதாக சிவராசாவின் அரசியல், செயலாளர், தனிப்பட்ட உதவியாளர் மற்றும் குமாஸ்தா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய குடிநுழைவுத் துறைக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் லஞ்சம் பெற முயன்றதாக அவர்கள் கைதாகி இருப்பது அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட காரியம் என்று சிவராசா சொன்னார்.

"என்னுடைய ஊழியர்களுக்கு எதிரான இத்தகைய லஞ்சப் புகாரை நிராகரிக்கிறேன். திட்டமிட்டு எனது ஊழியர்கள் இதில் சிக்க வைக்கப் பட்டுள்ளார்கள்" என்று வழக்கறிஞருமான சிவராசா கூறினார்.

"போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வங்க தேசத்தவர்களுக்குத் தொழில் நிபுணத்துவ பிரிவில் விசா பெற்றதாக கூறிய ஒரு வங்கதேசியின் விவகாரத்தில், குடிநுழைவுத் துறையில் நிலவும் ஊழல்கள் குறித்து நான் குற்றம் சாட்டி இருந்தேன்.

இது குறித்து எனது குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பந்தப்பட்ட சில ஆவணங்கள் ஆகியவற்றை குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனருக்கு ஆகஸ்ட் மாதம் நான் அனுப்பி வைத்தேன். இந்த விவகாரத்தில்தான் எனது ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள் எனக் கைது செய்திருப்பது எந்த வகையிலும் பொருத்தமானதாக இல்லை என்று சிவராசா தெளிவுப்படுத்தினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS