கற்பழிக்க வந்த 16 வயது பையனை எதிர்த்துப் போராடி விரட்டிய சிறுமி!

சமூகம்
Typography

ஜுலாவ், செப்.22- தன்னிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது பையனுடன் ஆக்ரோஷமாக போராடி விரட்டினார் 11 வயது சிறுமி. 

பின்னர் இந்தச் சம்பவத்தைப் பற்றி தன் தாத்தாவிடம் அந்தச் சிறுமி புகார் கூறினார்.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டு விட்ட  அந்த 16 வயது பையன் சம்பவம் நடந்து 12 நாட்களுக்குப் பின்னர் கடந்த புதன்கிழமை அவனது வீட்டில் போலீசாரால்  கைது செய்யப்பட்டான் என்று ஜுலாவ் ஒசிபிடி துணை சூப்ரிண்ட். பிடோல் நொயெங் சொன்னார்.

கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி வீட்டின் அறையில் தனியாக இருந்த ஐந்தாம் வகுப்பு மாணவியிடம், அவன், தகாத முறையில் நடக்க முயற்சித்தான். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, அவனிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள அவனைப் பதிலுக்குத் தாக்க ஆரம்பித்ததும் அவன் பயத்தில் ஓடிவிட்டான் என்று அவர் கூறினார்.

அவன் செம்பனைத் தோட்ந்த்தில் வேலை செய்து வந்தான் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவனை ஒரு வாரம் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளான் என்று பிடோல் சுட்டிக்காட்டினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி  மருத்துவ சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்தச் சம்பவம், 2017-ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டம் பிரிவு 14 ‘டி’-யின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS