சிறைச் சாலைக்கு செல்லும் வழியில் விபத்து! அன்வார் காயமின்றி தப்பினார்!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், செப்.22- எதிர்க்கட்சி கூட்டணியின் முன்னணித் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை பூலோவின் சவ்ஜானா உத்தாமாவில் விபத்துக்கு உள்ளானார் என்று அவரது வழக்கறிஞர் சிவராசா ராசையா தெரிவித்தார்.

கடந்த நான்கு நாட்களாக கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று பின்னர் சுங்கை பூலோ சிறைக்குத் திரும்பி செல்லும் வழியில் டத்தோஸ்ரீ அன்வார் பயணம் செய் வாகனம் விபத்துக்கு உள்ளானதாக அவர் கூறினார்.

அன்வார் சென்ற வாகனத்தை ஓட்டிய சிறை அதிகாரி, எதிரே வந்த வாகனத்துடன் மோதுவதைத் தவிர்க்க முயன்று திடீரென பிரேக் வைத்த தருணத்தில் பின்புறம் வந்த பாதுகாப்பு வாகனம்மன்வார் பயணம் செய்த வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது என்று சிவராசா குறிப்பிட்டார். 

அதன் விளைவாக, வாகனத்தின் பின்புறம் முற்றிலும் சேதமடைந்தது.  இந்த விபத்தில் அன்வாருக்கு காயம் எதுவும் ஏற்படாத போதிலும், அவர்  அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என அவர் கூறினார். 

மீண்டும் சுங்கை பூலோ மருத்துவமனையில் மருத்துவ சோதனை செய்யப்பட்ட பின்னர் அவர் சுங்கை பூலோ சிறைக்கு நலத்துடன் திரும்பியதாக சிவராசா சொன்னார். 

அன்வாருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுமா? என்பதனை உறுதி செய்ய அன்வாரை சந்தித்து சுகாதார அமைச்சின் துணைத் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் ஜெயேந்திரன் பேசவிருக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS