சிறுமியை அடித்த பாலர் பள்ளி ஆசிரியர்! காயமடைந்ததால் போலீசில் புகார்!

சமூகம்
Typography

 

 ஜொகூர்பாரு, செப்.23- ஜொகூர்பாருவைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலர் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் அச்சிறுமிக்கு காதுகளிலும் முதுகிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் குழந்தையின் தந்தை போலீசில் புகார் செய்தார்.

செப்டம்பர் 5-ஆம் தேதி பாட நேரத்தின் போது தன்னுடைய மகளின் கையெழுத்து முறையாக இல்லாதனால் 20 வயதுடைய ஆசிரியர் தன் மகளை அடித்துள்ளதாக, 4 வயது சிறுமியின் தந்தை ஃபு பெய் யூ கூறினார்.

பள்ளி முடிந்ததும் தன் மகள் அழுது கொண்டே வந்ததைப் பார்த்த அவர், மகளின் காதில் காயம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர்  தன்னுடைய மகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதுடன், இச்சம்பவம் பற்றி போலீசிலும் புகார் செய்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பாலர் பள்ளியைத் தொடர்பு கொண்ட போது, அந்தப் பாலர் பள்ளியின் நிர்வாக அதிகாரி ஹுவாங்,  சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்தச் சிறுமியை வேண்டுமென்றே காயப்படுத்தவில்லை என்று கூறினார்.  

அது மட்டுமின்றி, அச்சிறுமியின் நலனை விசாரிக்க அவர் நேரடியாக சிறுமியின் வீட்டிற்கே சென்று குழந்தையின் தந்தையைச் சந்தித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS