டிரைவிங் டெஸ்ட்:  73 வயது பாட்டி 'பாஸ்' ஆயிட்டாங்கோ!!

சமூகம்
Typography

கோலா நெருஸ், அக்.12- சுமார் 73 வயது பாட்டியின் நீண்ட நாள் கனவு நேற்று நிறைவேறியது. சாலைப் போக்குவரத்து மையத்தின் வாகன ஓட்டும் லைசென்சுக்கான தேர்வில் நேற்று வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார் 73 வயது பாட்டி. 

பாத்திமா ஹசான் என்ற பாட்டி அக்டோபர் 4-ஆம் தேதி வாகன ஓட்டும் உரிமம் தேர்வில் தோல்வியுற்றார். ஆனால் மனம் தளராமல் அவர் மீண்டும் அத்தேர்வுக்கு சென்று நேற்று தேர்ச்சியும் பெற்றார்.

"நான் வாகனமோட்டும் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டேன் என்று சாலைப் போக்குவரத்து மைய அதிகாரிகள் கூறிய போது நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இப்பொழுது எனக்கு வாகன லைசென்ஸ் இருப்பதால் மிகத் தைரியமாக வாகனத்தை, தனியாக ஓட்டிச் செல்ல முடியும் என்று பாத்திமா பாட்டி பெருமிதத்துடன் கூறினார்.

இந்த வயதில் வாகனமோட்ட லைசென்ஸ் எடுக்கப் போவதாகக் கூறிய போது என் குழந்தைகள் எனக்கு ஊக்குவிப்பு கொடுத்து என்னை வாகன ஓட்டும் பயிற்சி இடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள 60 வயதுடைய பயிற்சியாளர் ரொஸ்லான் மன்சூரும் எனக்கு பக்க பலமாக இருந்து என் வெற்றிக்கு ஆதரவாக இருந்தார். ஆக அவர்கள் அனைவருக்கும் என் நன்றி என பாத்திமா ஹசான் கூறினார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS