கோம்பாக்கில் சடலம்; இலங்கைத் தமிழர் என அடையாளம் கண்டுபிடிப்பு!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், அக்.12- கோம்பாக்கில் மலைப்பகுதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் யாருடையது என அடையாளம் காணப்பட்டது. கொலை செய்யப்பட்டு 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே வீசப்பட்டவர் ஓர் இலங்கைத் தமிழர் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

இந்தக் கொலை தொடர்பில் இதுவரை இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலைச் செய்யப்பட்ட ஆடவனின் கை, கம்பியால் கட்டப்பட்டு,  தலை மற்றும் கால்கள் வெள்ளைக் கோணிப் பையில் மூடிக் கட்டப்பட்டிருந்தது என கோம்பாக் ஓசிபிடி துணைப் போலீஸ் அலி அமாட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மீட்கப்பட்ட சடலத்திற்குரியவர், 32 வயதான இலங்கைத் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அட்டை இருந்தது. அவரது உடலில் குத்தப்பட்டிருந்த 'பச்சை'யினை வைத்து, அவரது மலேசிய மனைவி தனது கணவரின் உடலை அடையாளம் காட்டினார்.

இந்த நபர், வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் இங்கு கொண்டுவந்து வீசப்பட்டிருக்கலாம் என கோம்பாக் போலீஸ் அதிகாரி அலி அமட்ட் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS