குழந்தைப் பிறப்பைப் பதிவு செய்ய  2 மாதம் போதும்! டத்தோ ஜஸ்லான்

சமூகம்
Typography

 

ஜொகூர்பாரு, அக்.12- குழந்தைப் பிறப்பைப் பதிவு செய்வதற்குப் பெற்றோர்களுக்கு இரண்டு மாதக் காலமே போதுமானது. தீபகற்ப மலேசியாவில் பிறப்பைப் பதிவு செய்வதற்கு எவ்வித சிரமத்தையும் பெற்றோர்கள் எதிர்நோக்குவதில்லை. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் கூறினார். 

நகர்புற உருமாற்ற மையம், புறநகர் உருமாற்ற மையம், தேசிய பதிவு இலாகாவின் ‘நடமாடும்' சேவை மையங்களினால் இப்பொழுது குழந்தைப் பிறப்பைப் பெற்றோர்கள் எளிதாகப் பதிவு செய்யலாம்.  

தாமதமாக பிறப்பைப் பதிவு செய்தால் ரிம.1,000 அபராதம் விதிக்கப்படும் என்பது பிறப்பு, இறப்பு, மற்றும் தத்தெடுத்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அபராதத் தொகை விதிப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதாக அவர் சொன்னார். 

குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்யவில்லை என்றால் குழந்தைகளுக்குத் தடுப்பூசிப் போடுவதில் சில சிக்கல்களைப் பெற்றோர்கள் எதிர்நோக்க நேரிடும் என நூர் ஜஸ்லான் விளக்கமளித்தார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS