மலேசியர் போல் நடித்த 20 வயது மாதை  மாட்டிவிட்டது 'நெகாராகூ'

சமூகம்
Typography

 

 கோலாலம்பூர், அக்.12- நேற்று நடந்த குடிநுழைவு துறையின் சோதனை நடவடிக்கையின் போது வெளிநாட்டு பெண் ஒருவர் தான் ஒரு மலேசியன் எனக் கூறி தப்பிக்க முயன்றாள். ஆனால், 'நெகாராகூ' பாடச் சொன்ன போது அவர் மாட்டிக்கொண்டார்.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டவரையும் கைது செய்யும் நோக்கில் நேற்று ஒரே நேரத்தில் புடு அடுக்குமாடி வீடுகளிலும் ஜாலான் கியா பெங் இடத்திலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை ரோந்து பணி நடைபெற்றது.

புடு அடுக்குமாடி வீடுகளில் சோதனை நடந்து கொண்டிருக்கும் போது 20 வயது பெண் கைதாவதிலிருந்து தவிர்க்க, பல நாடகங்களை நடத்தினாள். 

அவள் கர்ப்பமாக இருப்பதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியதோடு, “நான் மலேசிய பெண் என்று நிருபிக்க போதிய ஆவணங்கள் இப்போழுது இல்லாவிட்டாலும் நான் மலேசியன் தான்' என்று வலியுறுத்தினாள்.

‘நீ மலேசிய பெண் என்றால் நெகாராகூ பாடு’ என்று குடிநுழைவு துறை அதிகாரிகள் கேட்டனர். அப்பெண்ணால் தேசிய கீதத்தைப் பாட முடியாததால் அவரைக் கைது செய்தனர். 

புடு அடுக்குமாடி வீட்டில் மொத்தம் 21 பேரும் ஜாலான் கியா பெங்கில் சுமார் 25 பேர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதற்காகக் கைது செய்யப்பட்டனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS