இளவரசர் சார்ல்ஸ் மலேசியா வருகை;  பயங்கரவாத மிரட்டல் இல்லை -ஐஜிபி

சமூகம்
Typography

கோத்தா கினபாலு,அக்.12- பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ்  அடுத்த மாதம் மலேசியாவிற்கு வருகைப் புரியும் வேளையில் எந்தவொரு பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லை என ஐஜிபி டான்ஶ்ரீ முகமட் ஃபுசி ஹருண் கூறினார்.

எந்த அச்சுறுதலும் இல்லாத நிலையிலும் நாங்கள் பலத்த பாதுகாப்பை அவர்களுக்கு வழங்குவோம் என டான்ஶ்ரீ ஃபுசி சொன்னார். பீர் விழாவுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தலை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலியா ஆகியோர் அடுத்த மாதம் கோலாலம்பூர், சரவாக், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களுக்கு அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொள்ளவிருக்கின்றனர். 

இவர்கள் நவம்பர் 3-ஆம் தேதி கோலாலம்பூருக்கு வருகை புரிவார்கள். காமன்வெல் நாடுகளுடன் பிரிட்டன் கூட்டாட்சியைக் கொண்டாடுவதற்கும், இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்வதற்கு முன் மலேசியாவிற்கு வருகைப் புரியவுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS