பிறப்புப் பதிவு: ரிம.1,000 அபராதமா?  உள்துறை அமைச்சுக்கு கண்டனம்!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், அக்12- குழந்தைப் பிறந்த 60 நாட்களுக்குள், அப்பிறப்பைப் பதிவு செய்யாத பெற்றோர்களுக்கு இனிமேல், 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு அறிவித்திருப்பதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கண்டனம் தெரிவித்தனர். 

யைந்த அபராதத் தொகை மிக அதிகமாக உள்ளது. ஏழை மக்களால் இந்தத் தொகையை செலுத்த முடியாது என்று பிகேஆ மகளிர் தலைவி ஜுரைய்டா கமாருடின் மற்றும் ஜசெகவின் தேசிய விளம்பர உதவிச் செயலாளர் தியோ நீ செங் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாது, நினைத்த போதெல்லாம் அபராதத் தொகையை செயல்படுத்த தேசிய பதிவு இலாகாவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று அவ்விருவரும் கூறினர். 

அதிகரிக்கப்பட்டுள்ளதிந்த அபராதத் தொகை, தீபகற்ப மலேசியாவின் குறைந்த பட்ச வருமானத் தொகையாகும் என ஜுரைய்டா குறிப்பிட்டார். 

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில், பிறப்பு, இறப்பு, மற்றும் தத்தெடுத்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால், அபராதத் தொகை விதிக்கப்பட வேண்டும் என்ற திருத்தங்கள் ஏதும் இடம் பெறவில்லை. சட்டத்திருத்தைற்கு முந்திய அடிப்படைச் சட்டத்தின் 12-ஆவது பிரிவின் கீழும் இது குறித்து எந்த விவரமும் குறிப்பிடப் படவில்லை என அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் கூறினார். 

உள்துறை அமைச்சின் உத்தரவின் பேரில் இந்த அபராதத் தொகை அதிகரிக்கப் படக்கூடாது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் சொன்னார். 

அந்த அபராதத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால், பலரால் அதனைச் செலுத்த இயலாது. இதனால், பிறப்புப் பத்திரம் இல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூலாய் நாடாளுமன்ற தியோ நீ செங் கூறினார். 

"குழந்தைப் பிறப்பினைப் பதிவு செய்வது அவசியம். ஆனால், அவ்வாறு செய்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான காரணம் யாது என்பதை தேசிய பதிவு இலாகா கூர்ந்து கவனிக்க வேண்டும். பெற்றோர்களின் சோம்பலா? பொறுப்பின்மையா? படிப்பறிவு இல்லாத காரணமா? அல்லது ஏழ்மையா? என்றெல்லாம் ஆராயவேண்டும் என்றார் அவர்.

     

BLOG COMMENTS POWERED BY DISQUS