12 வயது சிறுமி நீர்வீழ்ச்சியில் மரணம்!  மேலும் 3 சிறுமிகளின் கதியென்ன? 

சமூகம்
Typography

 

லங்காவி,அக்.13- லுபோக் செமிலாங் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற 12 வயது சிறுமி நீரில் மூழ்கி இறந்தவிட்ட நிலையில். மேலும் 3 சிறுமிகள் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டனர்.

வியாழக்கிழமை அவர்கள் நால்வரும் லுபோக் செமிலாங் நீர்வீழ்ச்சிக்குத் தனியாக குளிக்க சென்றுபோது இத்துயரச் சம்பவம் நடந்தது. 

குஸ்தினா புத்ரி வீரா என்ற அந்த 12 வயது சிறுமியின் உடலை, அவர் மூழ்கிய இடத்திலிருந்து 800 மீட்டரில் தூரத்தில் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கண்டு பிடித்தனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று சிறுமிகளையும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.. 5 வயது சித்தி ஐஷா காசிம், 11 வயது நூர் இமான் வஹிடா மற்றும் 12 வயது அனிஸ் சதிரா என்ற சிறுமிகள்தான் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் என லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் நடவடிக்கை அதிகாரி அடையாளம் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS