தீபாவளிக்கு 10% சாலைக் கட்டணத் தள்ளுபடி!

சமூகம்
Typography

கோலாலம்பூர், அக்.13- கிராண்ட் சாகா மற்றும் கிராண்ட் செப்பாடு ஆகிய நிறுவனங்கள், தீபாவளி திருநாளை முன்னிட்டு தனது நெடுஞ்சாலையை பயன்படுத்தவிருக்கும் கார்களுக்கு 10% சாலைக் கட்டணத் தள்ளுபடியை வழங்கவிருக்கிறது. 

இந்த 24 மணி நேர கட்டணத் தள்ளுபடி, அக்டோபர் 18-ஆம் தேதி நள்ளிரவு 12-மணிக்கு தொடங்கப்பட்டு அன்றிரவு 11.59-க்கு முடிவடையும். 

"இவ்விரு நெடுஞ்சாலைகளையும் உபயோகிக்கவிருக்கும் கார் ஓட்டுநர்களுக்கு இந்த 10% கட்டணத் தள்ளுபடியை வழங்குவதில் நாங்கள் பூரிப்படைகிறோம்" என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.ராஜசோழன் தெரிவித்தார். 

தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் இவ்வேளையில், அனைவரும் சாலை பாதுகாப்பை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.  

 

BLOG COMMENTS POWERED BY DISQUS