பெற்ற மகளை விபசாரத்திற்கு விற்றதாக தாய் மீது குற்றச்சாட்டு! 15 ஆண்டு சிறையா?

சமூகம்
Typography

 

 லாவாஸ்,அக்.13- வாங்கிய கடனைக் அடைப்பதற்கு 14 வயதுடைய பெற்ற மகளை விபசாரத்திற்கு விற்றதாக ஒரு தாய் மீது இங்குள்ள நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, நிருபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அந்தத் தாய் அனுபவிக்க நேரலாம்.

இதற்கு உடந்தையாக இருந்ததாக 45 வயதுடைய கரோக்கே மையத்தின் உரிமையாளரான மற்றொரு பெண்மணியும்  குறைந்தபட்சம் 15 ஆண்டுகால சிறைத்தண்டனை எதிர்நோக்கியுள்ளார். 

வயதுக் குறைந்த சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக இவர்கள் இருவரின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை லாவாஸ் நகரிலுள்ள இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கெலி மாரேங் முன்னிலையில் இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவர்கள் 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரும் எந்தக் காரணம் கொண்டும் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் தொடர்பு கொள்ள முயலக்கூடாது என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இவர்கள் இருவருக்கும் 2 நபர்களின் உத்தரவாதத்தின் பேரில் 8,000 ரிங்கிட் ஜாமின் வழங்கப்பட்டது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS